திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்களின் தற்போதைய நிலை குறித்து வேளாண்துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பாசன ஆறு, வாய்க்கால்களில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் 70% பயிர்கள் காய்ந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.