திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கேன்டீனில் வழங்கிய உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாங்கிச் சென்ற இட்லி, சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது. உணவகத்தில் கேட்டபோது சிறிய பல்லிதான் இதற்கு பயப்பட வேண்டாம் என உரிமையாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிறிதுநேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உணவகத்தில் வழங்கிய உணவில் பல்லி!!
0