திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 17ம்தேதி காலை 11.22 மணிக்கு தொடங்கி, 18ம்தேதி காலை 9.04 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 17ம்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பவுர்ணமி நாட்களில் வழக்கம்போல் சென்னை வழித்தடத்தில் இருந்து 30 குளிர்சாதன பஸ்கள் உள்பட 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கவும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.