சென்னை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம் அர்ச்சகர் E.P.P. தியாகராஜ குருக்கள் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம் இளவரசு பட்டம், மிராசு அர்ச்சகர் E.P.P. தியாகராஜ குருக்கள் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
தியாகராஜ குருக்கள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சிஷ்யர்களுக்கும், திருக்கோயிலை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.