திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத்திற்கு 7,500 பேர் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் அமைச்சர் பேட்டியளித்தார். பரணி தீபத்திற்கு 4,000 பேர் அனுமதிக்கப்படுவர். தீபத்திருவிழாவையொட்டி தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்தார்.