திமுக பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட
திருவண்ணாமலை, செப்.13: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் அண்ணாதுரை, ஆர்.டி.அரசு, கே.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, அவைத் தலைவர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் என்.பாண்டுரங்கன், லோகநாதன், ஜெயராணிரவி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், கோ.எதிரொலிமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
