திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய காரணமானவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கருவை கலைத்துவிட்டு வந்தால் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய கல்யாணசுந்தரம் கைது செய்யப்பட்டார். தேவபாண்டலம் கிராமத்தில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து, மாத கருவை எரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. சிறுமி கருக்கலைப்பு தொடர்பாக போலி மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: ஏமாற்றியவர் கைது
0