Tuesday, March 5, 2024
Home » திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

by Lakshmipathi

*வரும் 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு

*நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 7.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதையொட்டி, நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக, அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினர் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹1000 ரொக்கமாகவும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1112 இலங்கை தமிழர் மறுவாழ்வு குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 107 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அதற்காக, மாவட்டத்தில் உள்ள 1,643 ரேஷன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது.
மேலும், நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளிடம் இருந்து பனிக் கரும்பு கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதையொட்டி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ெசங்கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசு நிர்ணயித்துள்ள உயரம் மற்றும் தரத்தில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை வரும் 10ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொங்கல் பரிசுத்ெதாகுப்பை வழங்குகிறார். மேலும், அந்தந்த பகுதிகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளனர்.

வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. எனவே, அப்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, எந்த நாளில், எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன் முன்கூட்டியே வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. இப்பணியில், சம்மந்தப்பட்ட ரேஷன் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கார்டு எண் மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் உள்ளிட்ட விபரங்கள், சம்மந்தப்பட்ட ரேஷன் கடை தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர்களில், யாரேனும் ஒருவர் நேரில் வந்து கைரேைகயை (பயோமெட்ரிக்) பதிவு செய்து, பரசுத் தொகுப்பை பெற்றுச்செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் நிகற்பந்தல், குடிநீர் வசதியை செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கண்காணிக்க, மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஒவ்வொரு தாலுகாவுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள 38,929 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்கள் வழங்கும் பணியில் நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிகளை தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளும் வழங்கிட தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

19 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi