திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர்கள் பணியிடங்களை முன்னாள் படைவீரர்கள் கொண்டு நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,600 வழங்கப்படும்.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து அதிக அளவில் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.