திருவள்ளுர்: திருவள்ளுர் அருகே டயர் உதிரி பாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பூண்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை 10.30 மணி அளவில் இயந்திர பகுதியில் மின் கசிவு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீயானது மளமள வென பற்றி ஏறிய தொடங்கியது.
தகவலறிந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தால் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.