திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல் சுற்று வட்டார இடங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அடுத்த ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், கோவில்பதாகை, பட்டாபிராம், கொரட்டூரில் மிதமான மழை பெய்கிறது.