திருவள்ளூர்: கோளூர் பெரிய ஏரியில் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 185 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியில் 50 நாட்களுக்கு 3 அடி ஆழத்துக்கு மட்டும் மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பரத் 5 அடிக்கு மேல் மண் அள்ளுவதாக பொன்னேரி கோளூர் கிராம விவசாயிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். மண் அள்ளுவதற்கு தடை விதிக்கவும், மண் அள்ள அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விதிக்கப்பட்டிருந்தது.