திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு அலுவலக சங்க தேர்தலில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் ஆணையர் வெங்கடேசன், தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் கணேசன், மாநிலத் தலைவர் மதுரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாவட்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர்களாக நாகலிங்கம், சாந்தம், ராஜ்குமார், மாவட்டச் செயலாளராக ஜெய பிரகாஷ், துணைச் செயலாளர்களாக முரளிதாஸ், ராஜேஷ், பொருளாளராக பாலமுருகன், தணிக்கையாளராக மணி, தலைமை நிலைய செயலாளராக தெய்வசிகாமணி, அமைப்பு செயலாளர்களாக நாகராஜன், ஜேம்ஸ், மாவட்ட பிரச்சார செயலாளராக வினோத்குமார், மாவட்ட மகளிரணி செயலாளராக ஜி.உமா மகேஸ்வரி,
மாநில செயற்குழு உறுப்பினர்களாக சண்முகம், பாலமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தேவா, ஸ்ரீதர், கோபிச்சந்திரன், கண்ணதாசன், கவி, பொன்ராஜ், ராஜன் மற்றும் சங்க வட்டக்கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.