திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை எதிரே ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வரும் மாணவிகள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கடந்து வர வேண்டிய நிலைமை உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாணவிகள் சாலையை கடப்பதற்கு தினமும் மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூரில் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
0