சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் காயம் அடைந்துள்ளார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் முதியவர் கஸ்தூரி ரங்கன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதியவரை முட்டிய மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.