திருப்பூர்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மாத ஜெயக்குமார் (34). கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்த இவர் போலி நகைகளை வைத்துவிட்டு, உண்மையான தங்க நகைகளை திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள ஒரு தனியார் வங்கி ஊழியரான கார்த்திக் என்ற நண்பர் மூலம் 17 பேர் பெயரில் அடகு வைத்து ரூ.2.5 கோடி பெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கேரள போலீசார் ஜெயக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூர் வந்து தனியார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டதுடன் ரூ.2.5 கோடியையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. மேலும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு வங்கியில் அடமானம் வைத்த 900 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.