Thursday, April 18, 2024
Home » இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருப்பூர், நாகை வேட்பாளர்கள் யார்? இன்று அறிவிக்க வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருப்பூர், நாகை வேட்பாளர்கள் யார்? இன்று அறிவிக்க வாய்ப்பு

by Ranjith

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நிர்வாக குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் நாராயணா, நல்லக்கண்ணு உட்பட நிர்வாக குழுவின் 31 உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக,கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்புராயன் போட்டியிட்டு 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றார். இதனால் இம்முறையும் இவருக்கே சீட் வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல்,நாகையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் , மீண்டும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாகை தொகுதியை பொறுத்தவரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில், 8 வேட்பாளர்கள் கட்சி சார்ந்தும், 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு 5,22,892 வாக்குகளை பெற்று பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த சரவணன் 3,11,539 வாக்குகளை பெற்றார். அமமுக கட்சியை சேர்ந்த செங்கொடி 70,307 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறையும், இவ்வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என கட்சி தலைமை நம்பியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

fifteen + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi