திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து 38 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்துல் ரகுமான், தினேஷ், சண்முகசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தலையில் தொப்பி அணிந்து வாகனங்களை திருடி வந்ததாக 3 பேர் தெரிவித்தனர்.