திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் 2016 முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் குணசேகரன் (58). 2021ல் மீண்டும் போட்டியிட்டு தோற்றார். இவரது மனைவி கவிதா. இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். குணசேகரன் கடந்த மாதம் முதல் உடல்நிலை சரியில்லாததால் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். கடந்த வாரம் திடீரென குணசேகரனுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். திருப்பூர் ராக்கியாபாளையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், தாமோதரன், விஜயகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் ரோட்டரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
திருப்பூர் அதிமுக மாஜி எம்எல்ஏ திடீர் மரணம்
0
previous post