வெள்ளகோவில், ஆக.7: வெள்ளகோவில் பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் தடுக்க கோரி வெள்ளகோவில் நகர்மன்ற 12வது வார்டு உறுப்பினர் சிட்டி ஜி. பிரபு, 13-வது வார்டு உறுப்பினர் வைகை கே. மணி ஆகியோர் வெள்ளகோவில் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 20 தினங்களுக்கு முன்பு உப்புபாளையம் ரோடு, முத்துக்குமார் நகர் பகுதியில் அரிசி கடை மற்றும் செல்போன் கடையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன, அதை தொடர்ந்து 2 தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டின் பின்புறமாக ஒரு சிறிய சந்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இருந்துள்ளார்.
அதைப் பார்த்த பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளார். இதை கண்டதும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


