Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ரூ.5.06 கோடியில் முடிவுற்ற, புதிய திட்ட பணிகள் துவக்கம்

காங்கயம். மார்ச் 3: வெள்ளகோவில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை தலைமை தாங்கினார். தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா, வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகானந்தன், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மனோகரன், காங்கயம் வட்டாட்சியர் தங்கவேல், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.