திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆலங்காயம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும். குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். நல்லகுண்டாவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். ஆம்பூரில் ரூ.1 கோடியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0
previous post