திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த 2020-21ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் உண்டியல் காணிக்கை சில லட்சங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் கொரோனா முடிந்த பின்னர் உண்டியல் காணிக்கை மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 7 மாதங்களில் ரூ.827 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி ஒரேநாளில் ரூ.7.68 கோடி காணிக்கை கிடைத்தது.