Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 24 லட்சம் பேர் தரிசனம்: ரூ.119 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் 24.08 லட்சம் பேர் தரிசனம் செய்து ரூ.119.86 கோடி காணிக்கை செலுத்தினர். திருப்பதி கோயிலில் கடந்த மாதம் (ஜூன்) மொத்தம் 24.08 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். கோயிலில் ரூ.119.86 கோடி காணிக்கை செலுத்தினர். அதிகபட்சமாக 14ம் தேதி 91,720 பக்தர்கள் தரிசித்தனர். நாளொன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தினர்.

இதில் அதிகபட்சமாக கடந்த 30ம் தேதி ரூ.5.30 கோடி காணிக்கை கிடைத்தது. ஜூன் மாதத்தில் 10.05 லட்சம் பேர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கடந்த மே மாதத்தில் 23.77 லட்சம் பேர் சுவாமியை தரிசித்து ரூ.106.83 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.