திருப்பதி: திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதி கொத்தப்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று முன்தினம் அதிகாலை கொள்ளை நடந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை காவலாளி உடையில் ஏடிஎம் அறைக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து ஏடிஎம்மின் டிஜிட்டல் பாஸ்வேர்டு மற்றும் கீ பேடை உடைத்து ரூ.39 லட்சத்தை எடுத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் தெரிய வந்தது. திருட்டு நடந்த எஸ்பிஐ ஏடிஎம் மையத்தை எஸ்பி சுப்பாராயுடு ஆய்வு செய்தார்.