திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 79,003 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 33,140 பேர் வேண்டுதல்படி தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். அதன்படி நேற்று ரூ.3.52 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இன்று காலை 31 அறைகள் நிரம்பியதால் வெளியே சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.