திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி அக்டோபர் 3ம் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி நான்கு மாடவீதிகளில் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. அதன்படி, 4ம் தேதி மாலை 5.45 முதல் 6 மணிக்குள் பிரமோற்சவம் கொடியேற்றம் நடக்கிறது. 12ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றிரவு 8.30 முதல் 10.30 மணி வரை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.