திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அவ்வழியாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. இதனைக்கண்டு பீதியடைந்த வியாபாரிகள் உடனடியாக வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை புதருக்குள் சென்று மறைந்துவிட்டது.
இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டமாக மலையேற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.