திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு பாக்ராபேட்டையில் இருந்து ஸ்ரீவாரிமெட்டு பகுதிக்கு செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகபட்லா வனப்பகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகே தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் 3 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. போலீசாரை கண்டதும் அதில் இருந்தவர்கள் தப்பியோடினர். உடனே போலீசார் விரட்டி சென்று 19 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரம் வெட்ட முயன்ற 19 பேர் கைது: திருப்பத்தூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்
previous post