திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் உண்டியல் கொப்பரையை நன்கொடையாக வழங்கினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் குடும்பத்தினர் உண்டியல் கொப்பரையை நன்கொடையாக கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.