திருமலை: கடப்பாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ₹2 கோடி மதிப்புள்ள 101 தங்கத் தாமரை மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நடைபெறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவைக்காக ₹2 கோடி மதிப்பிலான 108 தங்க தாமரை மலர்களை பிரபல ஜூவல்லர்ஸ் ஒன்றில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.
நேற்று இந்த தங்க தாமரை மலர்களை கடப்பாவை சேர்ந்த நன்கொடையாளர் ஜுவல்லரி நிறுவன தலைவருடன் இணைந்து ஏழுமலையான் கோயிலிலுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள் சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பிறகு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.