திருமலை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யபட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்துக்கு 5 கி.மீ. வரை நீண்ட வரிசை இருப்பதால் அக்.1, 7, 8, 14, 15, ஆகிய நாட்களில் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யபட்டுள்ளது.