திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதம் இருமுறை கருட சேவை நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இம்மாதம் இருமுறை கருட சேவை நடைபெற உள்ளது. அதன்படி குரு பவுர்ணமியான வரும் 10ம் தேதியும், கருட பஞ்சமியையொட்டி வரும் 29ம் தேதியும் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகன சேவை நடைபெற உள்ளது. 108 வைணவ திருத்தலத்தில் கருட வாகன சேவை சிறப்பு வாய்ந்த நிலையில், அதேபோன்று ஏழுமலையான் கோயிலிலும் கருட சேவையில் பக்தர்கள் சுவாமி வீதி உலா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருப்பதியில் ஜூலை மாதம் 2 கருட சேவை
0