ஆந்திரா: நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு போலே பாபா நிறுவனம் தந்தது அம்பலமானது. திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கில் கைதான உ.பி.யை சேர்ந்த போலே பாபா டெய்ரி நிறுவன இயக்குநர்கள் மற்றும் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிர்வாக இயக்குநர் ராஜசேகரனும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமின் கோரிய மனு மீது ஆந்திர ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.