மதுரை: திருப்பரங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 92 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். வசூலான பணத்தை எண்ணி கொண்டிருந்தபோது ஊழியர்களை மிரட்டி கொள்ளை கும்பல் பணத்தை பறித்து சென்றனர்.