Friday, April 19, 2024
Home » திருநெல்வேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்: விளவங்கோட்டில் தாரகை களமிறக்கம்

திருநெல்வேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்: விளவங்கோட்டில் தாரகை களமிறக்கம்

by Karthik Yash

சென்னை: திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளர்கள் மட்டும் இறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் 2வது பட்டியலை டெல்லி மேலிடம் நேற்று பிற்பகலில் வெளியிட்டது. அதில் திருநெல்வேலி தொகுதியில் சி.ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவார் என்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சி.தாரகை கத்பட் போட்டியிடுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்த், திருநெல்வேலியில் போட்டியிடும் சி.ராபர்ட் ப்ரூஸ் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi