Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடையத்திற்கு புதிய சார் பதிவாளர் நியமனம்

கடையம்,ஜூலை 16: கடையத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்த முகமது அப்துல் மாலிக் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் மேலப்பாளையம் சார் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கடையத்திற்கு புதிய சார் பதிவாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களை வைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் பல பத்திரங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவானது. இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 2ம் தேதி வெளியானது.

இதையடுத்து கடையம் சார் பதிவாளாக நியமிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் நயினார் கோவில் சார் பதிவாளர் பாஸ்கரன் கடையம் வந்து புதிய சார் பதிவாளராக பொறுப்பேற்றார். அவருக்கு பத்திரப்பதிவு எழுத்தர்கள், பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.