திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 24 புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிர் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக ஏற்கனவே கருணாகர் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 24 பேரை புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளது. அதில் தமிழகத்தின் சார்பில் திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னை சேர்ந்த எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார். சங்கர், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவி ஏற்க உள்ளார். திருப்பூர் பாலசுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் குழு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.