திண்டிவனம்: திண்டிவனம் அருகே கோலமாவு மூட்டை சரிந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது கோலமாவு மூட்டை சரிந்ததில் பரிதாபமாக பலியானான். கோலமாவு விற்பனை செய்யும் தந்தை சின்னப்பராஜ் வீட்டின் முன்பாக மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார். மூட்டைக்கு அடியில் சிக்கி கொண்டு சிறுவன் மேகராஜ் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
Advertisement


