ஜோதிடத்தில் எந்தப் புள்ளியிலிருந்து இயக்கம் தொடங்குகிறது. எந்தப் புள்ளி இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிந்து, அந்தப் புள்ளியின் இறை வடிவத்தை நாம் அடையும் பொழுது இயக்கமும் தொடங்குகிறது. இதற்கு நாம் அறிந்தும் புரிந்தும் கொள்வது காலமானம், வர்த்தமானம் ஆகும். இயக்கத்தை இயற்கையிலிருந்து தொடங்குவதே இறையின் அவசியம் என்பதை உணர்வோம்…
இந்திரலோகத்தில் ரம்பை மற்றும் ஊர்வசியுடன் வலம் வந்த இந்திரனுக்கு தன்னைவிட அழகுள்ளவர் எவரும் இல்லை என்ற கர்வம் உண்டாயிற்று. இந்த தருணத்தில் இந்திரலோகத்திற்கு துர்வாச முனிவர்
விஜயம் செய்தார். அவரை பார்த்தும் பார்க்காததும் போன்று இந்திரன் துர்வாசரை அவமதித்தான். கடும் கோபம் கொண்ட துர்வாசர் உனது அழகு அழியக் கடவது என சபித்தார். அவன் உடல் முழுவதும் வெண்புள்ளிகள் தோன்றியது. தனது தவறை உணர்ந்த இந்திரன் துர்வாசரிடம் பணிந்து மன்னிக்க வேண்டினான். துர்வாசர் மன்னித்தார். பின்பு, சாபத்திற்கான விமோசனம் வேண்டினான். துர்வாசர் சிவபெருமானை வேண்டினால் சாப விமோசனம் உண்டாகும் என கூறினார்.பூலோகம் வந்த இந்திரன் மங்களாபுரிக்கு சென்று சிவனை வேண்டி நோய் நீங்க தவம் புரிந்தான். சிவபெருமானும் மனமிறங்கி சாப நிவர்த்தி உண்டாகும் என வரம் கொடுத்தார். இந்திரன் வரம் பெற்ற இத்தலம்தான் இறையனூர் மங்களேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தலத்தில்தான் ஒருமுறை சிவன் உபதேசித்த மந்திரத்தை கவனியாமல் இருந்ததால் பார்வதி தேவியை பூலோகத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார். இந்த திருத்தலத்தில்தான் பார்வதி வழிபாடு செய்யவே, மனம் குளிர்ந்த சிவபெருமான் ஞான உபதேசம் அருளி தன் திருமேனியிலும் இடம் அளித்தார் என புராணங்கள் கூறுகின்றன. சூரியனும் சாப விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. மண் முந்தியோ மங்கை முந்தியோ என்று போற்றப்படும் பழமையான உத்திரகோசமங்கை திருத்தலத்தை அடியேற்றி பல சிறப்பு அம்சங்கள் கொண்டிருப்பதால் வட உத்திரகோசைமங்கை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவபெருமான சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள தெய்வங்களுக்கு செவ்வாய், வியாழன், சனி, சூரியன் ஆகிய கிரகங்களுக்கு நாமகரணம் செய்திருக்கிறது.
* அனுஷ நட்சத்திரத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபட்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும். இது பௌர்ணமி அன்று செய்வதும் சிறப்பாகும். இதே நாளில் வெள்ளைகொண்டை கடலை எள்ளுருண்டை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து தானம் கொடுத்தால் டாக்குமெண்ட் தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.
* உபய லக்னத்தில் வியாழன், புதன் இருந்தால், அது கேந்திராதிபத்தியம் தோஷமாகும். பௌர்ணமி அன்று இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து இந்திரனை வேண்டினால் தோஷம் குறையும்.
* கிருத்திகை நட்சத்திரத்தன்று விரலி மஞ்சளும் வித்யா குங்குமம் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து. கருப்பு நிற பசுவிற்கு உணவு வழங்கினால் தொழில் வளர்ந்து சிறப்படையும்.
* விசாகம் நட்சத்திரத்தன்று பிஎச்டி படிப்பவர்கள் சுவாமிக்கு வஸ்ரதானம் செய்து ஏழை எளியோருக்கு உணவு வழங்கினால் பிஎச்டி படிப்பை சிறப்பாக முடிப்பர்.
* பூசம் நட்சத்திரத்தன்று கருப்பு நிற போர்வையை அர்ச்சனை செய்து நீண்ட நாள் நோய்வாய் போர்த்திருந்து பின்பு ஒன்பது நாள் கழித்து தலைசுற்றி கடற்கரையோரம் வீசவே நோய் குணமாகும்.
* ஏகாதசி திதி அன்று சுமங்கலிகள் விளக்கு பூஜை செய்தாலும் சுவாமிக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டாலும் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் குபேர சம்பத்தும் வாரி வழங்கும் மங்களபுரீஸ்வரர் வழங்கு மங்களபுரீஸ்வரர் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.
ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு