சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால அவகாசம் நீட்டித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்வதாலும், இதர காரணங்களாலும் பணிகள் முடிக்க அவகாசம் கோரப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் 71 கிமீ நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. புளியந்தோப்பு, அசோக் நகர், ராயப்பேட்டை, கொளத்தூர், வேளச்சேரியில் 49 கிமீ நீளமுள்ள வடிகால் பணியை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது 80% வரை வடிகால் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை நீட்டிக்கப்பட்ட அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். முன்னுரிமை பணிகளை சிறப்புக் குழு கண்காணிக்கும், தாமதமானால் அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால அவகாசம் நீட்டித்துள்ளனர். முன்னதாக செப்.15-க்குள் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 30-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு அளித்துள்ளனர்.