சென்னை: சென்னை திருவேற்காடு அன்பு நகரில் டைல்ஸ் கடை உரிமையாளர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தனது கடை முன் இருசக்கர வாகனம் நிறுத்திய இளைஞர்களை தட்டிக் கேட்ட போது அரிவாளால் வெட்டியுள்ளார். இளைஞர்கள் கத்தியால் வெட்டியதில் டைல்ஸ் கடை உரிமையாளர் பழனி, கடை ஊழியர் கார்த்திக் படுகாயம் அடைந்துள்ளார். டைல்ஸ் கடை உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.