வாஷிங்டன்: சீனாவின் டிக்-டாக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 3 முறை டிக்-டாக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீட்டித்த டிரம்ப், தற்போது புதிய அறிவித்துள்ளார். டிக்-டாக் செயலியை வாங்கும் நபரை 2 வாரங்களில் அறிமுகம் செய்வதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிக்-டாக் செயலிக்கான தடையை நீக்கினார். சீன நிறுவனத்தின் டிக்-டாக் செயலி அமெரிக்கர்களால் வாங்கப்பட்டு, செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
டிக்-டாக் செயலியை வாங்க தயார்: டிரம்ப்
0