‘ஆள்பாதி ஆடைபாதி’ என்றனர் நமது முன்னோர்கள். ஒரு மனிதன் உடல்வாகில் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் நிலையில் அவன் அணியும் ஆடையும் கவனம் பெறவேண்டும். இதன்மூலமே அவனது தோற்றம் முழுமை பெறும் என்பதே இதற்கான பொருள். ஆனால் உடலழகில் போதிய ஆர்வம் காட்டாத மனிதர்கள் கூட, உடைகள் அணிவதில் தனிக்கவனம் செலுத்துகின்றனர். அதிலும் பண்டிகை நாட்களில் தாங்கள் தனித்து தெரியவேண்டும். பிறரின் கவனத்ைத ஈர்க்க ேவண்டும் என்ற இலக்கில் உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இந்த வகையில் பலரும் தங்களை வெளிஉலகத்திற்கு அழகாக காட்டுவதற்கு உடைகள் ேதர்வை தான், மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். நேர்த்தியான உடைகள் தான் ஒருவரது தோற்றத்தின் மதிப்பை உயர்த்தி காட்டுகிறது என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக உள்ளது.
இப்படி எண்ணத்தில் நிறைந்துவிட்ட உடைகள், ஒவ்வொரு தலைமுறையையும் ஈர்க்கும் வகையில் புதுப்புது மாடல்களில் உருவாக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் என்று ஒவ்வொருவரும் அவரவருக்கான உடைகளை லேட்டஸ் டிரென்ட்டுக்கு ஏற்ப தேர்வு செய்வதற்கு பலமணி நேரம் செலவிட்டு வருகின்றனர்.
இந்தவகையில் 78சதவீதம் பேர் தேர்வு செய்வது உடலை ஒட்டிப்பிடிக்கும் இறுக்கமான உடைகள் தான் என்று ெதரிவித்துள்ளனர் ஆடை வடிவமைப்பாளர்கள். இப்படி இறுக்கமான உடைகளை நாம் அணிந்து பலரது மனதில் இடம் பிடித்து மகிழ்ந்தாலும், அதில் அபாயங்களும் ஏராளமாக உள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். உதாரணமாக நீண்ட நேரம் அணியும் இறுக்கமான உடைகள், வயிற்றில் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தும். இது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதேபோல் மேலும் பல்வேறு பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து சருமநோய்கள் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இறுக்கமான உடைகள் சரும வறட்சி, உடல்வெப்பம் அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை எளிதாக உருவாக்கும். உதாரணமாக மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் அணியும் போது கால்பகுதியில் இறுக்கம் ஏற்படும். இதனால் அந்த பகுதியில் உள்ள செல்கள் சுவாசிக்க முடியாமல் போகும். இதனால் ரத்த ஓட்டத்தில் குழப்பம் ஏற்படும். சீரற்ற ரத்தஓட்டம் காரணமாக சருமம் பாதிப்புக்கு உட்படும். தொடைகளில் உள்ள நரம்புகளுக்கும் அழுத்தம் ஏற்படும். இது உணர்ச்சியற்ற தன்மையை உருவாக்கி விடும்.
இறுக்கமான உடைகளை நீண்ட நேரம் அணிவதால் வியர்வை சுரந்து அரிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இது பூஞ்சை தொற்றுகளால் உருவாகிறது. வியர்வை அதிகமாக வெளியேறி உடைக்குள் படியும்போது தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதேபோல் பெண்களின் சருமத்தை பாழ்படுத்துவதில் முகப்பருவுக்கு முக்கிய இடம் உண்டு. இறுக்கமான உடைகள் அணிவதும் முகப்பரு உண்டாவதற்கு ஒரு காரணம். இறுக்கமான உடைகள் அணியும் போது வியர்வை வெளியேறிச்செல்ல முடியாமல் முகத்தில் படிவதும் உண்டு.
இதுவும் முகப்பருவுக்கு ஒரு காரணம். இறுக்கமான உடை அணிவது முடிவளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக முடிகள் வேர்க்காலில் இருந்து மேல்நோக்கியே வளரும். ஆனால் இறுக்கமான உடைகள் அணியும் போது சிலமுடிகள் நேராக வளராமல் பக்கவாட்டிலோ அல்லது சருமத்திலோ படரும். இதுவும் நோய் தொற்றுகளை உருவாக்கும். சரியாக முடிவளராத இடங்களில் கொப்புளங்கள் தோன்றவும் வாய்ப்புள்ளது. இதேபோல் படர்தாமரை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படவாய்ப்புள்ளது.
மொத்தத்தில் இறுக்கமான உடை என்பது பாலினபாகுபாடு இல்லாமல் அனைவரும் குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவேபேஷன் என்ற பெயரில் இறுக்கமான உடைகள் அணிவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அல்லது குறைந்த நேரம் அணிந்து கொள்ளும் வழக்கத்தையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.