உடுமலை: திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழுதகட்டி ஓடைப்பகுதியில் புலி ஒன்று வாயில் காயங்களுடன் இறந்து கிடந்தது. வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இதில் அது 9 வயது ஆண் புலி என்பது தெரியவந்தது. மேலும் புலியின் வாயில் காயங்கள் இருந்ததால் புலி இயற்கையாக உயிரிழந்ததா? அல்லது கொல்லப்பட்டதா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு புலியின் உயிரிழப்புக்கு காரணங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.