வனத்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சம்பந்தப்பட்ட பகுதியில் வனத்துறையினர் சென்று ஆய்வுசெய்தனர். அதில் புலி நடமாட்டத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை. அதிகாலை இருளான நேரத்தில் ஏதேனும் வன விலங்கு அவரை சாய்த்து கீழே தள்ளி இருக்கலாம். அதனால் காயம் ஏற்பட்டு இருக்கலாம். இருந்தாலும் இப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதா என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. சம்பவம் நடந்த மேதிரமலை பகுதி ஏற்கனவே புலி நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் சிற்றாறு காலனி பகுதியில் இருந்து சுமார் 4 கிமீ சுற்றளவில் தான் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.