Friday, March 1, 2024
Home » கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயணம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயணம்

by Ranjith

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்மாவட்டம் மற்றும் கேரளா மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால், உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக தென்மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிகளவில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

தற்போது, தென்மாவட்டங்கள் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள், சொந்த ஊர்களுக்கு மிகுந்த ஆர்வமாக செல்வதால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள், மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் கார்கள், வேன்களில் பயணம் செய்வதை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் அதிகளவில் செல்வதால், தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வருவதால், பயணிகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

அதன்படி, சென்னை – திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864 தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910 வரையும், சென்னை – கொச்சிக்கு கட்டணம் ரூ.3,018. தற்போது ரூ.15,661 முதல் ரூ.16,124 வரையும், சென்னை – கோழிக்கோடுக்கு கட்டணம் ரூ.3,734. தற்போது கட்டணம் ரூ.12,590 முதல் ரூ.15,552 வரையும், சென்னை – கண்ணூருக்கு கட்டணம் ரூ.3,519. தற்போது கட்டணம் ரூ.11,696 முதல் ரூ.15,858 வரையும், சென்னை – தூத்துக்குடிக்கு கட்டணம் ரூ.4,044. தற்போது ரூ.10,894 முதல் ரூ.14,234 வரையும்,

சென்னை – கோவைக்கு கட்டணம் ரூ.3,315. தற்போது கட்டணம் ரூ.10,769 முதல் ரூ.14,769 வரையும், சென்னை – திருச்சிக்கு கட்டணம் ரூ.2,579. தற்போது கட்டணம் ரூ.5,631 முதல் ரூ.9,555 வரையும், சென்னை – மதுரைக்கு கட்டணம் ரூ.3,314. தற்போது கட்டணம் ரூ.10,192 முதல் ரூ.17,950 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் பலமடங்கு விமான கட்டணங்கள் உயர்ந்தாலும், தென்மாவட்ட மற்றும் கேரள மாநில மக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் விமானங்களில் பயணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi