Saturday, April 20, 2024
Home » மார்ச் 7ம் தேதி முதல் வியாழக்கிழமையிலும் நவக்கிரக கோயில்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

மார்ச் 7ம் தேதி முதல் வியாழக்கிழமையிலும் நவக்கிரக கோயில்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: நவக்கிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து இனி வியாழக்கிழமைகளிலும் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்று கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் நவகிரக தலங்களுக்கு பயணம் செய்து மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் கடந்த 24ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன்படி, வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு சுற்றுலா பேருந்து வரும் மார்ச் 7ம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

இதன் பயணக்கட்டணமாக ஒரு நபருக்கு ₹750 நிர்ணயம் செய்யப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 5 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோயில் தரிசனம், பின்னர் ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவானை தரிசனம் செய்து, காலை உணவு இடைவேளைக்கு பிறகு 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், காலை 10 மணிக்கு சூரியனார் கோயில் சூரிய பகவான் தரிசனம், 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோயில் தரிசனம், 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை, 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோயில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் செய்து, மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

எனவே, மார்ச் 7ம் தேதி முதல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 3 நாட்களில் கும்பகோணத்தில் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

12 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi