*கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி அலம்ப, முகம் பளபளப்பாக இருக்கும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளைப் பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து, சூடாக்கி முகத்தில் தேய்த்து அலம்ப பருக்கள் மறைந்து விடும்.
*முகத்தில் தேமல் மறைய எலுமிச்சைச்சாறுடன், துளசி இலைச் சாறு சேர்த்து தடவி வர தேமல் மறையும்.
*வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.
*தினமும் காலையில் ஒன்றிரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் மினுமினுப்பு ஏற்படும்.
*துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊறவிட்டு குளித்தால் முகம் அழகு பெறும்.
*முட்டைக்கோஸ் கேரட் வேக வைத்த நீரை ஆற வைத்து முகம் அலம்ப பளிச்சென்று இருக்கும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில் அவரை இலைச் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் மாறும்.
*பப்பாளி, எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, அலம்பி வந்தால்முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
*2 ஸ்பூன் ஆப்பிள் விழுது, ½ ஸ்பூன் பால் பவுடர், ½ ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து சருமத்தில் தேய்த்து குளிக்க சருமம் பளபளக்கும்.
– எஸ். விஜயலட்சுமி