Thursday, September 19, 2024
Home » எஸ்எம்எஸ் லிங்க் மூலம் பெண்ணிடம் ரூ.25,000 மோசடி ஜார்கண்ட் குற்றவாளி கைது

எஸ்எம்எஸ் லிங்க் மூலம் பெண்ணிடம் ரூ.25,000 மோசடி ஜார்கண்ட் குற்றவாளி கைது

by Dhanush Kumar

சென்னை: எஸ்எம்எஸ் லிங்க் மூலம் ெபண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்த முக்கிய குற்றவாளியை, சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்தனர். தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் பிரிவில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தெல்மாகரோலின் என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்தது. அந்த லிங்கிற்குள் சென்றதும் இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் (ஐபிபிபி) வங்கி கணக்குடன் பான் கார்ட் அப்டேட் செய்ய வேண்டும் என்றும், இல்லையேன்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நான் உண்மை என்று நம்பி, அந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி விவரங்கயும், ஓடிபி எண்ணை செலுத்தியதும், எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் திருடப்பட்டுவிட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், துணை கண்காணிப்பாளர் தெய்வேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான் மரிய ஜோசப் மற்றம் 4 காவலர்கள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர், பணத்தை இழந்த பெண்ணின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநில சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் கிரிடி மாவட்டம் ரட்டபாஹியர் அருகே உள்ள மார் கோடி கிராமத்தில் பதுங்கி இருந்த ஆகாஷ்மண்டல் (21) என்பவரை கைது செய்தனர்.

அவரை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களை குறிவைத்து மோசடி லிங்க்கை அனுப்பி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இந்த மோசடியை கைது செய்யப்பட்ட ஆகாஷ் மண்டல் மற்றும் அவரது நண்பர் முகேஷ் மண்டல் இணைந்து செய்து வந்தது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள முகேஷ் மண்டலை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi